சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 12ஆம் நாள் குவாங்டோங் மாநிலத்தின் குவாங்சோ நகரில் உள்ள எல்ஜி டிஸ்ப்ளே(LG Display) குவாங்சோ தயாரிப்புத் தளம், ஜிஏசி அயன்(GAC AION) புதிய எரிசக்தி வாகனத் தொழில் நிறுவனம் ஆகியவற்றில் ஆய்வு பயணம் மேற்கொண்டார்.
இந்த ஆய்வுப் பயணத்தின் போது, உள்ளூரின் உயர்நிலை வெளிநாட்டுத் திறப்பு, தயாரிப்பு துறையின் உயர்தர வளர்ச்சி பற்றியும், அறிவியல் தொழில் நுட்பப் புத்தாக்கம், சுய வணிகச் சின்னங்களின் உருவாக்கம் முதலியவற்றை தொழில் நிறுவனங்கள் முன்னேற்றும் நிலைமை பற்றியும் அறிந்து கொண்ட அவர், தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள், ஆய்வாளர்கள், தொழிலாளர்கள் முதலியோருடன் பரிமாற்றமும் மேற்கொண்டார்.