சீனாவின் 2023ஆம் ஆண்டு தேசிய பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சிக்கான புள்ளிவிபர அறிக்கை ஒன்றை சீனத் தேசியப் புள்ளிவிபரப் பணியகம் பிப்ரவரி 29ஆம் நாள் வெளியிட்டது.
கடந்த ஆண்டில் சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு ஒரு கோடியே 26 இலட்சத்து 5 ஆயிரத்து 820 கோடி யுவானாகும். இது, 2022இல் இருந்ததை விட 5.2 விழுக்காடு அதிகம். இதில் முதலாவது தொழில் துறையின் கூடுதல் மதிப்புத் தொகை 8 இலட்சத்து, 97 ஆயிரத்து 550 கோடி யுவானாக, 2022இல் இருந்ததை விட 4.1 விழுக்காடு அதிகம்.
2ஆவது தொழில் துறையின் கூடுதல் மதிப்புத் தொகை 48 இலட்சத்து 25 ஆயிரத்து 890 கோடி யுவானாக, 2022இல் ஆண்டின் இருந்ததை காட்டிலும் 4.7 விழுக்காடு அதிகம். 3ஆவது தொழில் துறையின் கூடுதல் மதிப்புத் தொகை 68 இலட்சத்து 82 ஆயிரத்து 380 கோடி யுவானாக, 2022இல் இருந்ததை விட 5.8 விழுக்காடு அதிகம்.
இதனிடையே, முதலாவது காலாண்டில், சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 2022இல் இருந்ததை விட 4.5 விழுக்காடு அதிகம். 2ஆவது காலாண்டில் இம்மதிப்பு, 2022இல் இருந்ததை விட 6.3 விழுக்காடு உயர்வு ஆகும். 3ஆவது காலாண்டில் இம்மதிப்பு, 2022இல் இருந்ததை விட 5.2 விழுக்காடு அதிகம்.