இவ்வாண்டு முதல் தற்போது வரை, பெரிய ரக காற்று ஆற்றல் மற்றும் ஒளிவோல்ட்டா தளம், முக்கிய நீர் மின்நிலையம், நீரேற்று மின் நிலையம் உள்ளிட்ட திட்டப்பணிகளின் கட்டுமானத்தை சீனா தொடர்ந்து விரைவுபடுத்தி வருகிறது. புதுப்பிக்கவல்ல எரியாற்றல் வளர்ச்சிக்கான நல்ல நிலை இதன் மூலம் உருவாக்கப்பட்டு வருகிறது.
சீனத் தேசிய எரியாற்றல் நிர்வாகம் வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டின் முதலாவது காலாண்டில், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள காற்று ஆற்றல் மின் உற்பத்தியின் மொத்த திறன் ஒரு கோடியே 4 இலட்சம் கிலோவாட்டை எட்டியுள்ளது. இக்காலாண்டில், தேசியளவில் காற்று ஆற்றல் மின் உற்பத்தியின் சராசரி பயன்பாட்டு விகிதம் 96.8 விழுக்காடாகும். இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததற்குச் சமம். காற்று ஆற்றல் மின் உற்பத்திக்கான முதலீடுத் தொகை 2490 கோடி யுவானாகும். இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 15 விழுக்காடு உயர்ந்துள்ளது.