சீன ஊடக குழுமத்தைச் சேர்ந்த சி.ஜி.டீ.என் சிந்தனை கிடங்கு அண்மையில், சீன ரென்மின் பல்கலைக்கழகத்துடன் இணைந்து உலக ஜனநாயக அமைப்பு முறை பற்றி 35 நாடுகளில் கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியது.
அதன் முடிவின்படி, எந்த ஒரு உயர்ந்த ஜனநாயகமும் இல்லை என்றும், சொந்த நாட்டின் நிலைமைக்கு பொருந்திய ஜனநாயக அமைப்பு முறை தான் தலைசிறந்ததாகும் என்றும் கருத்து கணிப்பில் பங்கேற்ற 84.8விழுகாட்டினர் தெரிவித்தார்.
அடிப்படை வாழ்வுரிமை, அனைவருக்கும் சமம் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவை கணிப்பில் பங்கேற்ற நபர்களின் மனத்தில் முதல் 3 இடங்களைப் பெற்றுள்ளன.
கணிப்பில் பங்கேற்ற ஆப்பிரிக்க நாட்டு மக்களின் கருத்தில், சீனாவின் அரசியல் அமைப்பு முறை மற்றும் ஜனநாயக அனுபவம் உலகின் முதலிடம் வகித்து மிகவும் கற்றுக்கொள்ளப்படத் தக்கதாகும் என்பது குறிப்பிடத்தக்கது.