புதிய காலத்தில் பன்முக நெடுநோக்கு ஒத்துழைப்புக் கூட்டாளி உறவை ஆழமாக்கும் சீனா மற்றும் ரஷியாவின் கூட்டறிக்கையில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதின் ஆகியோர் 21ஆம் நாள் கூட்டாகக் கையொப்பமிட்டு, இதை வெளியிட்டனர்.
உக்ரைன் பிரச்சினை குறித்து, ஐநா சாசனத்தின் குறிக்கோளையும் கோட்பாட்டையும் பின்பற்ற வேண்டும். சர்வதேசச் சட்டங்களுக்கு மதிப்பு அளிக்க வேண்டும் என்று அவர்கள் கருத்து தெரிவித்தனர்.
உக்ரைனுடன் பேச்சுவாரத்தையை விரைவில் மீண்டும் தொடங்க பாடுபடுவதாக ரஷியா தெரிவித்தது. இதைச் சீனா பாராட்டுகின்றது.
அரசியல் முறை மூலம் உக்ரைன் நெருக்கடியைத் தீர்ப்பது பற்றிய சீனாவின் நிலைப்பாடு என்ற ஆவணத்தில் சீனா வெளியிட்ட ஆக்கப்பூர்வக் கருத்துக்களை ரஷியா வரவேற்றுள்ளது.
ஐ.நா. பாதுகாப்பு அவையின் அங்கீகாரமின்றி ஒரு தரப்பு தடை மேற்கொள்வதை இரு தரப்பினரும் எதிர்க்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.