சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷிச்சின்பிங் சமீபத்தில், சிங்காய் மாநிலத்தில் ஆய்வு பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில்,
மத்திய கமிட்டியின் தீர்மானத்தை சிங்காய் மாநிலம் உணர்வுபூர்வமாகச் செயல்படுத்த வேண்டும். புதிய வளர்ச்சி கண்ணோட்டத்தை முழுமையாகவும் சரியாகவும் செயல்படுத்த வேண்டும்.
தேசியளவில் வளர்ச்சிப் பொது நிலைமையில் நெடுநோக்கு தகுநிலையை சிங்காய் கைபிடிக்க வேண்டும். சொந்த மேம்பாடுகளை வளர்த்து, சீர்திருத்தத்தை ஆழமாக்கி, திறப்புப் பணியை மேலும் விரிவாக்கி, சுற்று சூழலுக்கு சலுகையை வழங்க வேண்டும் என்றார்.
பசுமையான வளர்ச்சியில் நடைபோட வேண்டும். பல்வேறு தேசிய இனங்கள் ஒன்றுபட்டு வாழ்ந்து, செழுமையைக் கூட்டாக நனவாக்க வேண்டும். சிங்காய்-சிசாங் பீடபூமி இயற்கைச் சூழல் பாதுகாப்பு மற்றும் உயர் தரமுள்ள வளர்ச்சியை தொடர்ந்து முன்னேற்றி, சீனத் தனிச்சிறப்பு வாய்ந்த நவீனமயமாம் பற்றி சிங்காயின் புதிய அத்தியாயத்தை மாபெரும் முயற்சியுடன் உருவாக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.