சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 21ஆம் நாள் மாஸ்கோவிலுள்ள கிரெம்ளின் மாளிகையில் ரஷிய அரசுத் தலைவர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின் கூட்டாக செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றார்.
ஷிச்சின்பிங் கூறுகையில், நான் புதினுடன் ஒத்த கருத்தை எட்டி, எரியாற்றல், மூலவளம், இயந்திரம் மற்றும் மின்னணு பொருட்கள் வர்த்தகத்தையும், தகவல் தொழில் நுட்பம், வேளாண்மை உள்ளிட்ட துறைகளிலான ஒத்துழைப்பையும் விரிவாக்கி, பாரம்பரிய வர்த்தகம் மற்றும் புதிதாக வளரும் துறையின் கூட்டு வளர்ச்சியை முன்னேற்றுவோம் என்று தெரிவித்தார்.
இரு நாடுகள், தொடர்ந்து சர்வதேச சமூகத்துடன் இணைந்து, ஐ.நா சாசனத்தின் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச உறவுகளின் அடிப்படை விதிமுறையை உறுதியாகப் பேணிக்காத்து வரும். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, பிரிக்ஸ் நாடுகள் ஒத்துழைப்பு அமைப்பு முறை, 20 நாடுகள் குழு உள்ளிட்ட சர்வதேச பலதரப்புக் கட்டுக்கோப்புக்குள் ஒத்துழைப்புகளை வலுப்படுத்தி, உண்மையான பலதரப்புவாதத்தைச் செயல்படுத்தி வரும் என்று இரு தரப்பினரும் சுட்டிக்காட்டினர்.