சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் ரஷிய பயணம், உலகின் கவனத்தை ஈர்க்கும் நட்பு, ஒத்துழைப்பு, அமைதி ஆகியவற்றை வெளிப்படுத்தும் பயணமாகும் என்று சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான சின் கேங் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தற்சார்ப்பு மற்றும் அமைதியின் தூதாண்மைக் கொள்கையைச் சீனா பின்பற்றுவதையும் உலக அமைதியை மேம்படுத்தும் பரந்த மனதையும் இப்பயணம் காட்டியுள்ளது. மேலும் உலக பலதுருவமயமாக்கம் மற்றும் சர்வதேச உறவின் ஜனநாயகமயமாக்கத்துக்குத் இது துணை புரியும் என்றார் அவர்.