அமெரிக்க சிலிக்கன் வங்கி சம்பவம் குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பிங் 23ஆம் நாள் கூறுகையில், தற்போதைய உலகில், சர்வதேச நிதி அமைப்பு முறை நெருக்கமாகப் பிண்ணிப்பிணைந்துள்ளது. சிலிக்கன் வங்கி சம்பவம், உலகளாவிய நிதி சந்தையில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க டாலர், சர்வதேச நாணயம். அதனால், உள்நாட்டுப் பொருளாதாரச் சரிப்படுத்தலுக்கிணங்க மட்டுமல்ல, இதர நாடுகளில் ஏற்படுத்தக் கூடிய எதிர்மறையான விளைவையும் கவனமாக மதிப்பிடும் அடிப்படையில், நிதிக் கொள்கையை அமெரிக்கா கடைப்பிடிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.