8ஆவது சீன விண்வெளி தினத்தை முன்னிட்டு, சீன விண்வெளி தொழில் நுட்பக் குழுமம் ஏப்ரல் 22ஆம் நாள் வணிக நோக்கிற்கான 3 திரவ ராக்கெட் விசைப்பொறிகளை வெளியிட்டது. இவற்றில் YF-102 விசைப்பொறி, இக்குழுமத்தால் ஆராய்ந்து தயாரிக்கப்பட்ட முதலாவது திறந்த சுழற்சியுடன் கூடிய மீண்டும் பயன்படுத்தத்தக்க திரவ ஆக்ஸிஜன் மண் எண்ணெய் விசைப்பொறியாகும். அதன் சில மைய உதிரிப்பாகங்கள் முப்பரிமாண அச்சிடுதலில் தயாரிக்கப்பட்டு, அதிக நம்பகத்தன்மை, சிக்கனம் போன்ற மேன்மைகளைக் கொண்டுள்ளன. அதன் ஒட்டுமொத்த செயல்திறன் சர்வதேச அளவில் ஒரேமாதிரியான விசைப்பொறியின் நவீன அளவை எட்டியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஆண்டுக்கு 300 வணிக நோக்கிற்கான விசைப்பொறிகளைப் பொருத்தக்கூடிய உற்பத்தி வரிசையைச் சீன விண்வெளி தொழில் நுட்பக் குழுமம் உருவாக்கும்.