நவீனமயமாக்கம் காகிதத்தில் உள்ள தரவுகளைப் பொறுத்தது மட்டுமல்லாமல், மக்களின் மகிழ்ச்சி மற்றும் நல்வாழ்வையும் பொறுத்திருக்கும் என்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங் தெரிவித்தார். சீனப் பாணி நவீனமயமாக்கம், மக்களின் வாழ்வாதாரம் முக்கியம். நவீனமயமாக்கத்தின் கட்டுமானச் சாதனைகள் அனைத்து மக்களுக்கும் மேலதிகமாகவும் நியாயமாகவும் இருக்க வேண்டும். இவ்வாண்டு முதல் சீன பாணி நவீனமயமாக்கத்தை முன்னேற்றுவதற்கான நெடுநோக்கு கோணத்தில் ஷிச்சின்பிங் நின்று, மக்களின் வாழ்வாதாரத்தை உத்தரவாதம் செய்து மேம்படுத்தும் பணியை வெகுவாகப் பரவல் செய்தார். மக்களை மையமாகக் கொண்ட அணுகுமுறையை எப்போதும் கடைப்பிடித்து, நவீனமயமாக்கத்தின் கட்டுமானச் சாதனைகள் அனைத்து மக்களுக்கும் மேலதிகமாகவும் நியாயமாகவும் இருக்க வேண்டும் என்றார்.
மே திங்களில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உயர்தர வேலைவாய்ப்பை பன்முகங்களிலும் அளிப்பது குறித்து பதினான்காவது கூட்டு விவாதத்தை நடத்தியது. அப்போது ஷிச்சின்பிங் கூறுகையில், அனைத்து மட்டங்களிலும் உள்ள கட்சி குழுக்கள் மற்றும் அரசாங்கங்கள் வேலைவாய்ப்பு தரத்தின் பயனுள்ள முன்னேற்றத்தையும் அளவின் நியாயமான வளர்ச்சியையும் தொடர்ந்து மேம்படுத்தி, பெரும்பான்மையான தொழிலாளர்களின் மனநிறைவு, மகிழ்ச்சி மற்றும் பாதுகாப்பு உணர்வைத் தொடர்ந்து வலுப்படுத்த வேண்டும் என்றார்.