சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 14ஆவது சீன-அமெரிக்கச் சுற்றுலா உயர் நிலை பேச்சுவார்த்தைக்கு செய்தி அனுப்பினார்.
அவர் கூறுகையில், இவ்வாண்டு, சீனாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையிலான தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 45வது ஆண்டு நிறைவாகும். சீன-அமெரிக்க உறவின் அடித்தளம் மக்களால் போடப்பட்டுள்ளது. சீன-அமெரிக்க உறவின் கதவு மக்களால் திறக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா, சீன மற்றும் அமெரிக்க நாடுகளின் மக்கள் தொடர்பு மற்றும் பரிமாற்றத்தின் முக்கிய பாலமாகும். இரு நாடுகளின் பல்வேறு துறைகள், இந்த உயர் நிலை பேச்சுவார்த்தையைப் பயன்படுத்தி, பரிமாற்றத்தை ஆழமாக்கி, ஒத்த கருத்துக்களை எட்ட வேண்டும். சுற்றுலா ஒத்துழைப்பின் மூலம், இரு நாட்டு மக்களுக்கிடையிலான தொடர்பு மேம்படும்.
மானிடவியல் தொடர்பின் மூலம் இரு நாட்டு நட்பு தொடரும். “சான் பிரான்சிஸ்கோவில் எட்டிய ஒத்த கருத்துக்களை” விரைவில் நடைமுறைப்படுத்த இது உதவி செய்ய வேண்டும் என்று ஷிச்சின்பிங் விருப்பம் தெரிவித்தார்.