‘ஜனநாயகன்’ படப்பிடிப்புக்காக அங்கிருந்து கொடைக்கானல் செல்கிறார். அவரைக் காண விமான நிலையத்தில் குவிந்த ரசிகர்களுக்கு வேனில் சென்றவாறு கையசைத்தார்.
THE UNPARALLELED MASS OF #THALAIVAR @TVKVijayHQ 👑 #தமிழகவெற்றிக்கழகம் #மதுரை pic.twitter.com/QNimRie1iW
— TVK Vijay Trends (@TVKVijayTrends) May 1, 2025
கொடைக்கானல் தாண்டிக்குடி மலைப்பகுதியில் நடைபெறும் திரைப்பட படப்பிடிப்பிற்காக செல்லும் தாவீகா தலைவரும் நடிகருமான விஜய் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். மதுரை விமான நிலையத்தில் இருந்து கலைந்து செல்லுமாறு விஜய் அறிவுறுத்தியும் தொண்டர்கள் கேட்கவில்லை. மதுரையில் பிரசார வாகனத்தின் மீது ஏறி தொண்டர்களை நோக்கி கையசைத்தபடி சென்றார் த.வெ.க. தலைவர் விஜய். அவர் மீது மலர்களை தூவி மக்கள் வரவேற்றனர். சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு தொண்டர்கள் வரவேற்பு அளித்ததால் மதுரையே போக்குவரத்து நெரிசலில் ஸ்தம்பித்தது.