மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்று வரும் பிராந்திய ஒட்டுமொத்தப் பொருளாதாரக் கூட்டுறவு (ஆர்சிஈபி) ஒப்பந்தத்துக்கான 5ஆவது தலைவர்கள் கூட்டத்தில் சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங் அக்டோபர் 27ஆம் நாள் திங்கள்கிழமையன்று கலந்து கொண்டார்.
அப்போது அவர் கூறுகையில், பிராந்திய ஒட்டுமொத்தப் பொருளாதாரக் கூட்டுறவு ஒப்பந்தம் அமலுக்கு வந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக, உலகப் பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி இயக்காற்றல் குறைந்து காணப்பட்ட நிலையில், பல்வேறு உறுப்புகளுக்கிடையேயான பொருளாதார மற்றும வர்த்தக ஒத்துழைப்பு தொடர்ந்து ஆழமாகி, பிராந்திய பொருளாதார வளர்ச்சி குறிப்பிட்ட அளவில் அதிகரித்து காணப்பட்டது என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், ஆசியானின் மைய தகுநிலையை சீனா எப்போதும் ஆதரித்து வருகின்றது என்றும், பல்வேறு தரப்புகளுடன் இணைந்து உண்மையான பலதரப்புவாதத்தில் ஊன்றி நிற்கவும், பிராந்திய பலதரப்பு வர்த்தக அமைப்புமுறையின் நிலைத்தன்மையைப் பேணிக்காக்க உதவி அளிக்கவும், ஆர்சிஈபி ஒப்பந்தத்தின் ஒத்துழைப்பு அதிகமான நடைமுறை சாதனைகளைப் பெறுவதை முன்னேற்றவும் சீனா விரும்புகிறது என்று தெரிவித்தார்.
