தனது பதவியிழப்பிற்கு அமெரிக்காவே காரணம்; ஷேக் ஹசீனா குற்றச்சாட்டு  

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, தான் பதவி நீக்கம் செய்யப்பட்டதில் அமெரிக்காவின் பங்கு இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.
தன்னை ஆட்சியில் இருந்து அகற்ற பெரிய சதித்திட்டம் தீட்டப்பட்டதாக அவர் கூறினார்.

செயின்ட் மார்டின் தீவை தர மறுத்ததால், தன்னை ஆட்சியில் இருந்து நீக்க அமெரிக்கா திட்டமிட்டதாக ஹசீனா கூறியதாக எகனாமிக் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

இந்த தீவை பெற்றால் வங்காள விரிகுடாவில் அமெரிக்கா செல்வாக்கு பெற உதவியிருக்கலாம் என்று ஹசீனா கூறியுள்ளார்.
பங்களாதேஷில் வன்முறைகள் அதிகரித்து உயிர்பலி அதிகரிப்பதை விரும்பாததால்தான் ராஜினாமா செய்துவிட்டு வெளியேறியதாக அவர் கூறியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author