ஸ்பெயினில் ஏற்பட்டுள்ள கடும் புயல் மற்றும் வெள்ளப்பெருக்கு குறித்து, சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் நவம்பர் 2ஆம் நாள், ஸ்பெயின் மன்னர் ஆறாவது பெலிப்பேக்கு ஆறுதல் தெரிவித்தார்.
ஷி ச்சின்பிங் கூறுகையில், சீன அரசு மற்றும் சீன மக்களின் சார்பில், உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமுற்றோருக்கு மனமார்ந்த ஆறுதலையும் தெரிவிக்கிறேன் என்றார்.
மன்னர் பெலிப்பே மற்றும் ஸ்பெயின் அரசின் தலைமையில், பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலுள்ள மக்கள் பேரழிவை வெகு விரைவில் தோற்கடித்து, தாயகத்தை மீண்டும் புனரமைப்பு செய்வது உறுதி என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.