ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 11) டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் (IARI) 109 அதிக மகசூல் தரும், பல்வேறு தட்பவெப்பத்தைத் தாங்கக்கூடிய மற்றும் உயிரி வலுவூட்டப்பட்ட பயிர் வகைகளை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.
இந்த முயற்சியானது விவசாயத்தை புத்துயிர் பெறுவதற்கும், நாட்டில் உணவு பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் அரசாங்கத்தின் பரந்த மூலோபாயத்தின் ஒரு பகுதியாகும்.
இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் (ICAR) செயல்விளக்கக் களங்களில் மூன்று இடங்களில் இந்த விதைகள் மற்றும் நடவுப் பொருட்கள் அறிமுகப்படுத்தப்பட்டதாக மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்தார்.
109 பயிர் வகைகளில் 34 வயல் பயிர்கள் மற்றும் 27 தோட்டக்கலைப் பயிர்களும் அடங்கும்.