2025ஆம் ஆண்டு வெளிநாட்டு முதலீட்டை நிதானப்படுத்துவதற்கான செயல் திட்டத்தைச் சீனா 19ஆம் நாள் வெளியிட்டது.
சீனா வெளிநாட்டுத் திறப்பை மேலும் விரிவாக்குவதற்குரிய உறுதியான அறிகுறியையும், வெளிநாட்டு முதலீட்டுடன் ஒன்றுக்கொன்று நன்மை தந்து கூட்டு வெற்றி பெறுவதற்குரிய நல்லெண்ணம் மற்றும் நம்பிக்கையையும் இத் திட்டம் வெளிக்காட்டியுள்ளதாக ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்தனர்.
தற்போது, உலகப் பொருளாதார மீட்சி மந்தமாகக் காணப்படுவதோடு, உலகளவில் எல்லை கடந்த நேரடி முதலீட்டின் சூழலும் மோசமாக இருக்கின்றது. இந்நிலையில், உயர்தர வளர்ச்சியுடன் சீனப் பாணி நவீனமயமாக்கலை முன்னேற்றி வருகிற சீனா, வெளிநாட்டு திறப்பையும் மேலும் விரிவாக்கி வருகிறது. இத்திட்டம் சீனப் பாணி நவீனமயமாக்கலின் கட்டுமானத்துக்குத் துணையாக இருக்கும்.
அதோடு, வெளிநாட்டு முதலீட்டுக்கு மேலதிக சந்தை வாய்ப்புகளை வழங்கி சீனாவில் கூட்டு வளர்ச்சியைப் பெறுவதற்கும் உதவியளிக்க முடியும்.
திறப்பை விரிவாக்குவது, முதலீட்டை ஊக்குவிக்கும் நிலையை உயர்த்துவது, திறப்புக்கான மேடைத் திறனை உயர்த்துவது, சேவை உத்தரவாதத்தை விரிவாக்குவது ஆகிய 4 துறைகள் சார்ந்து 20 நடவடிக்கைகள் இச்செயல் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.
மேலும், வெளிநாட்டு தொழில்நிறுவனங்களின் முதலீட்டு கட்டமைப்பை மேம்படுத்துவது இத்திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. கால்நடை, உயர் தொழில்நுட்பத் தொழில், சேவைத் தொழில் முதலிய முக்கிய துறைகள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன. சீனாவில் முதலீடு செய்வதற்கான முக்கியப் புள்ளிகளை இது உறுதிப்படுத்தியுள்ளது.
அதுமட்டுமல்ல, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சீனாவில் பங்கு முதலீடு செய்வதும், இணைப்பு மற்றும் கையகப்படுத்துவதை எளிமைப்படுத்துவதும் இத்திட்டத்தில் முன்வைப்பக்கப்ட்டுள்ளன.
மேற்கூறிய பல்வேறு நடவடிக்கைகள் 2025ஆம் ஆண்டின் இறுதிக்குள் பயன் பெற வேண்டும் என்று இத்திட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இச்செயல் திட்டங்களால் சீனாவில் உள்ள வெளிநாட்டு நிறுவனங்கள் மேலதிக வாய்ப்புகளைப் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.