பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே நடந்து வந்த அதிகாரப் போராட்டத்தில், இந்திய தேர்தல் ஆணையம் அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பொதுக்குழுவை அங்கீகரித்துள்ளது.
இதன் மூலம், கட்சியின் பெயர், சின்னம், மற்றும் கொடியைப் பயன்படுத்தும் உரிமை அன்புமணிக்கு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே பாமகவில் கடுமையான உட்கட்சிப் பூசல் நிலவி வந்தது.
கட்சித் தலைவர் பதவியிலிருந்து அன்புமணியை நீக்குவதாக ராமதாஸ் அறிவித்தது, வன்னியர் சங்க மாநாட்டில் அவர் பேசியது எனப் பல சம்பவங்கள் கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தி வந்தன.
கட்சியின் எதிர்காலம் கருதி அன்புமணியை தலைவராக்கினாலும், அவர் தனித்துச் செயல்படுவதாக உணர்ந்த ராமதாஸ், அன்புமணியின் பல்வேறு கூட்டங்களுக்குத் தடை விதிக்க முயன்றார்.
பாமகவில் அன்புமணி ராமதாஸுக்குதான் அதிகாரம்; இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம்
