2024ஆம் ஆண்டு உலக இளைஞர் வளர்ச்சி மன்றக்கூட்டம் துவக்கம்

2024ஆம் ஆண்டு உலக இளைஞர் வளர்ச்சி மன்றக்கூட்டம் துவக்கம்

“இளைஞர்கள் இனிமையான எதிர்காலத்தைக் கூட்டாக உருவாக்குதல்” என்ற தலைப்பில் 2024ஆம் ஆண்டு உலக இளைஞர் வளர்ச்சி மன்றக்கூட்டம் ஆகஸ்டு 12ஆம் நாள் பெய்ஜிங்கில் துவங்கியது. 130க்கும் மேலான நாடுகள் மற்றும் 20க்கும் மேலான சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேலான இளைஞர் பிரதிநிதிகள் நேரடியாகவும், இணைய வழியாகவும் இம்மன்றக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
சீனப் பொறியியல் கழகத்தின் மூத்த அறிஞர் ட்சொங் நான்ஷான், உலக இளைஞர் மன்றத்தின் பொதுச் செயலாளர் பஷ்ராரி உள்ளிட்ட விருந்தினர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். முழு அமர்வில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 10க்கும் மேலான இளைஞர் அமைச்சர்கள், உலக வளர்ச்சி மற்றும் இளைஞர் வளர்ச்சி பற்றி கருத்துகளையும் அனுபவங்களையும் பரிமாற்றிக் கொண்டனர்.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இளைஞர் பிரதிநிதிகள், நான்நிங், ஹாங்சோ, ச்சொங்ச்சிங், ச்சாங்ஷா ஆகிய இடங்களுக்குச் சென்று, ஆய்வு மற்றும் பண்பாட்டுப் பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author