தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் பல்வேறு மாவட்டங்களில் இடைவிடாது கனமழை கொட்டு தீர்த்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மேற்குவங்கம், வங்கதேசத்தை ஒட்டிய வடமேற்கு வங்க கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதன் எதிரொளியாக தமிழகத்தில் ஆகஸ்ட் 18 மற்றும் 19 ஆகிய இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும் அந்த இரண்டு நாட்களும் ஏழு முதல் 11 சென்டிமீட்டர் மழைக்கு வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.