ஏழாவது முறையாக தேசிய விருது பெறும் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான்  

70 தேசிய திரைப்பட விருதுகள் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 16) அறிவிக்கப்பட்ட நிலையில், இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்திற்கு சிறந்த பின்னணி இசையமைத்ததற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
இதன் மூலம், ஏஆர் ரஹ்மான் ஏழாவது முறையாக தேசிய விருது பெறுகிறார்.
இதற்கு முன்னர், தமிழில் 1992இல் ரோஜா 1996இல் மின்சார கனவு, 2002இல் கன்னத்தில் முத்தமிட்டால் மற்றும் 2017இல் காற்று வெளியிடை ஆகிய படங்களுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது வென்றுள்ளார்.
அதேபோல், இந்தியில் 2001இல் வெளியான லகான் படத்திற்கு சிறந்த இசையமைப்பாளர் விருதும், 2017இல் மாம் படத்திற்கு சிறந்த பின்னணி இசைக்கான விருதும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

More From Author