இயக்குநர் ஆர்ஜே பாலாஜி மற்றும் நடிகர் சூர்யா மற்றும் கூட்டணியில் உருவாகி வரும் கருப்பு திரைப்படத்தின் முதல் பாடல், தீபாவளியை முன்னிட்டு திங்கட்கிழமை (அக்டோபர் 20) வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா, சுவாசிகா, காளி வெங்கட், இந்திரன்ஸ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்தத் திரைப்படத்தில் சூர்யா ஒரு வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.
மேலும், ஆன்மிகப் பின்னணியில் உருவாகும் ஒரு ஆக்ஷன் கதையாக இப்படம் இருக்கும் எனத் தெரிகிறது.
ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யாவின் கருப்பு முதல் பாடல் வெளியீடு
