நடிகர் சூர்யா அரசியலுக்கு வர வேண்டும் என இயக்குனர் போஸ் வெங்கட் வலியுறுத்தல்  

நடிகரும் இயக்குனருமான இயக்குனர் போஸ் வெங்கட், சனிக்கிழமை (அக்டோபர் 26) நடைபெற்ற கங்குவா ஆடியோ வெளியீட்டு விழாவில், நடிகர் சூர்யா அரசியலுக்கு வர வேண்டும் எனக் கூறினார்.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) என்ற பெயரில் கட்சி தொடங்கியுள்ளதோடு, அதன் முதல் மாநாட்டை விழுப்புரம் அருகே உள்ள விக்கிரவாண்டியில் ஞாயிற்றுக் கிழமை நடத்த உள்ளார்.
இந்த மாநாட்டிற்கு ஒரு நாள் முன்னதாக, நடந்த கங்குவா ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய போஸ் வெங்கட், “சூர்யா தனது அன்பான ரசிகர்களை வழிநடத்துவது போல் ஒரு சூப்பர் ஸ்டார் அவர்களின் ரசிகர்களை வழிநடத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.
இது ரசிகர்களுடனான சூர்யாவின் பிணைப்பை பிரதிபலிக்க கூறுவதாகத் தோன்றினாலும், அடுத்து கூறியவைதான் இதை பேசுபொருளாக்கியுள்ளது.

You May Also Like

More From Author