இவ்வாண்டு முதல் இந்தியாவுக்கான ராணுவ உதவியை அதிகரிப்பதாக அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்ப் தெரிவித்தார்.
இது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாக்குன் 14ம் நாள் பதிலளிக்கையில்,
நாடுகளுக்கிடையிலான உறவு வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்பில், சீனாவைப் பயன்படுத்தக் கூடாது. மேலும், குழு அரசியல் மற்றும் முகாம் எதிரெதிர் நிலையைத் தூண்டி விடக் கூடாது.
ஆசிய-பசிபிக் பிரதேசம், அமைதி வளர்ச்சிக்குரிய இடம். புவிசார் போட்டிக்கான சதுரங்கப் பலகை அல்ல என்று தெரிவித்தார்.