“விஜய் தனியாக நின்று ஆட்சி அமைக்க வாய்ப்பே இல்லை”- வானதி சீனிவாசன்

Estimated read time 0 min read

விஜய்யின் தேர்தல் வாக்குறுதிகள் “வாய்ப்பு இல்லை ராஜா” என்பது போல உள்ளது என பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.

ஈரான் அமெரிக்கா போர் காரணமாக துபாயில் சிக்கித்தவித்த 18 பேர், கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் முயற்சியால், பாதுகாப்பாக நாடு திரும்பினர். அவ்வாறு நாடு திரும்பியவர்கள் இன்று கோவை விமான நிலையத்தில் வானதி சீனிவாசனை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், ”போர் பதற்றத்தால் உலக மக்கள் அனைவரும் பாதிப்பு அடைந்து உள்ளனர். சுற்றுலா சென்ற மக்கள் பாதிப்பு அடைந்து உள்ளனர். அவர்களுக்கு உதவ மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து உள்ளது. பாஜகவினர் குழுவாக இணைந்து செயல்பட்டு வருகின்றனர். கோவையை சேர்ந்த 18 பேர் துபாயில் சிக்கி கொண்டு இருந்தனர்.

அவர்களை மீட்க உதவி கேட்டனர். அவர்களின் கோரிக்கை ஏற்று இந்தியா சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட விமானம் மூலம் வந்தனர். வந்தவர்கள் காண்பித்த வீடியோ பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு வருகின்றனர். நன்றி தெரிவிக்க வந்தவர்கள், அவர் சொல்லும் சூழ்நிலை நமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் ஒவ்வொரு நாட்டிற்கு செல்லும் போது நாட்டின் போர் ரகசியங்கள் சொல்லுவார்களா? போர் வியூகங்கள் யாருக்கும் சொல்ல மாட்டார்கள். இந்தியா எல்லைக்குள் நடந்தால் தக்க பதிலடி கொடுக்கும்.

கோவை பாதுகாப்பு நகரம் என்று சொல்லும் நிலை இல்லை. நேற்று 82 வயதான பெண்மணி கொலை செய்யப்பட்டு உள்ளார். வயதானவர்கள் வீட்டில் தனியாக இருக்கும் நிலை இல்லை. சட்டவிரோதமாக நடைபெறும் மது விற்பனை தடை செய்ய வேண்டும். தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் இல்லை. பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் கடமை தமிழ்நாடு அரசு தவறவிட்டது. விஜயின் ஸ்பெசல் மகளிர் தினம் முன்னிட்டு வாக்குறுதிகள் அளித்து உள்ளார். விஜய் ஆட்சிக்கு வர வாய்ப்பு உள்ளதா? தனியாக ஆட்சி அமைக்க முடியுமா? இதற்கு வாய்ப்பு இல்லை. விஜயின் வாக்குறுதிகள் நன்றாக உள்ளது. பெண்களுக்கு அரசியல் கட்சியினர் ஓடி ஓடி வாக்குறுதிகள் கொடுக்கின்றனர். விஜயின் வாய்ப்பு வாக்குறுதிகள் என்பது “வாய்ப்பு இல்லை ராஜா” என்பது போல் தான். தலைவர்கள் தனிமனித ஒழுக்கம் மிகவும் முக்கியம். ஆனால் அதை கடை பிடிக்காதது திமுக. தலைவர்கள் தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை சுயபரிசோதனை செய்ய வேண்டும். பாஜக தமிழ்நாட்டில் வந்துவிட்டது.” என்றார்.

Please follow and like us:

You May Also Like

More From Author