சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது மத்திய கமிட்டியின் 4வது முழு அமர்வு நிறைவடைந்துள்ள நிலையில் நடைபெறும் 8ஆவது சீனச் சர்வதேச இறக்குமதி பொருட்காட்சி, உலகளாவிய 155 நாடுகள், பிரதேசங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளை ஈர்த்துள்ளது. 4 இலட்சத்து 30 ஆயிரம் சதுர மீட்டருள்ள இப்பொருட்காட்சியில் 4108 வெளிநாட்டு நிறுவனங்கள் பங்கெடுத்துள்ளன. இப்பொருட்காட்சியின் பரப்பளவு மற்றும் நிறுவனங்களின் எண்ணிக்கை வரலாற்றில் இல்லாத அளவில் புதிய உச்சத்தை எட்டியுள்ளன.
சீன ஊடக குழுமத்தின் சி.ஜி.டி.என் 46 நாடுகளிலிருந்து 14 ஆயிரம் பேரிடம் நடத்திய கருத்துக் கணிப்பின்படி, சீனா ஒரு திறப்பு தன்மை மற்றும் போட்டித் திறமை கொண்ட தாராள சந்தையாகும் என்று 72.6% பதிலளிப்பாளர்கள் கருதுகின்றனர். 28 நாடுகளிலுள்ள விசாரணைபடுத்தப்பட்டோர் சராசரியை விட மேலும் அதிகமாக இதனை ஏற்றுக்கொண்டு கருத்து தெரிவித்து, விசாரணைபடுத்தப்பட்ட நாடுகளின் மொத்த எண்ணிக்கையில் 60 விழுக்காட்டை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உயர் நிலை வெளிநாட்டுத் திறப்பை தொடர்ந்து விரிவாக்கி, ஒத்துழைப்பு மற்றும் கூட்டு நலன் தரும் புதிய வளர்ச்சி நிலைமையைப் படைத்து, உலகில் பல்வேறு நாடுகளுடன் கூட்டு வளர்ச்சி வாய்ப்புகளைப் பகிர்ந்து கொண்டு, கூட்டு வளர்ச்சியை நனவாக்க வேண்டும் என்பது சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது மத்திய கமிட்டியின் 4வது முழு அமர்வில் முன்வைக்கப்பட்டுள்ளது.
சீன சுங்கத் துறை தலைமைப் பணியகம் வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டின் முதல் 10 திங்கள்காலத்தில், சீனாவின் சரக்கு வர்த்தகத்திற்கான மொத்த இறக்குமதி மற்றும் ஏற்றுமதி மொத்த மதிப்பு 37 இலட்சத்து 31 ஆயிரம் கோடி யுவானாகும். பிப்ரவரி திங்கள் முதல் இது வரை 9 திங்கள்காலமாக வர்த்தகம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சீனாவில் சீரான வணிகச் சூழல், வெளிநாட்டு முதலீட்டாளர்களை அதிகமாக ஈர்த்துள்ளது என்று 79.8 விழுக்காட்டு விசாரணைபடுத்தப்பட்டோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
