உத்தரப் பிரதேசத்தில் தடம்புரண்டது சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில்  

வாரணாசியில் இருந்து அகமதாபாத் செல்லும் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 17) அதிகாலை உத்தரப் பிரதேசத்தில் உள்ள கான்பூர் மற்றும் பீம்சென் ரயில் நிலையங்களுக்கு இடையே தடம் புரண்டது.

இதில் 22 பெட்டிகள் தடம் புரண்டன. ரயில் எஞ்சின் தண்டவாளத்தில் இருந்த பொருள் ஒன்றின் மீது மோதியதில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
எனினும், இந்த சம்பவத்தால் பொதுமக்களுக்கு காயங்கள் எதுவும் இல்லை என்று கான்பூர் நகர உதவி ஆட்சியர் ராகேஷ் வர்மா கூறியுள்ளதாக ஏஎன்ஐ தெரிவித்துள்ளது.

மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், தண்டவாளத்தில் இருந்த ஒரு பொருளின் மீது இயந்திரம் மோதியதால் ரயில் தடம் புரண்டது என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

You May Also Like

More From Author