வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் புகைப்படம்: தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவிப்பு  

Estimated read time 1 min read

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், தேர்தலை நேர்மையாகவும், எளிமையாகவும் நடத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.
அவர் வெளியிட்ட அறிவிப்பின்படி, வாக்காளர்கள் வேட்பாளர்களை எளிதில் அடையாளம் காணும் வகையில், இந்த முறை வாக்குப்பதிவு இயந்திரங்களில்(EVM) வேட்பாளர்களின் பெயருடன் அவர்களின் கலர் புகைப்படங்களும் இடம்பெறும்.
தமிழகத்தில் மொத்தம் 5.67 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.
இதில் 18-19 வயதுடைய புதிய வாக்காளர்கள் 12.5 லட்சம் பேர் என்பது குறிப்பிடத்தக்கது.
வாக்குப்பதிவு நடைபெறும் நாளில், ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்குப்பதிவு சதவீதம் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படும்.
தமிழகத்தில் உள்ள 75,000 வாக்குச்சாவடிகளிலும் குடிநீர், கழிப்பறை மற்றும் நிழற்குடை போன்ற அடிப்படை வசதிகள் உறுதி செய்யப்படும்.

You May Also Like

More From Author