சமீபத்தில் வெளியிடப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நடிகர் கமல்ஹாசன் பெற்றுக்கொண்டார்.
முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டை கொண்டாடி வரும் தமிழக அரசு, அவரது நினைவாக சிறப்பு நாணயம் வெளியிடுவதற்காக மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தது. இந்த கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு 100 ரூபாய் நாணயம் வெளியிடுவதற்கு ஒப்புதல் அளித்தது.
மேலும், சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற நாணய வெளியீட்டு நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று நாணயத்தை வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
எனினும், மக்கள் நீதி மய்ய தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் இதில் தனிப்பட்ட காரணங்களால் கலந்துகொள்ள முடியவில்லை.