பிரிக்ஸ் அமைப்பில் சேர இந்தோனேசியா முயற்சி செய்யும் என அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் அண்மையில் கூறியுள்ளார்.
இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின் ஜியன் திங்கள்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில்
வளர்ந்து வரும் சந்தைகள் மற்றும் வளரும் நாடுகள் ஆகியவற்றுக்கிடையே ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பை பலப்படுத்தி, பொதுவான நலன்களைப் பேணிக்காப்பதற்கான முக்கிய அரங்கமாக பிரிக்ஸ் அமைப்பு விளங்குகிறது. சர்வதேச விவகாரங்களில் நேர்மறையான மற்றும் நிலையான சக்தியாக பிரிக்ஸ் மாறியுள்ளது.
பெரிய வளரும் நாடாகவும் வளர்ந்து வரும் சந்தையாகவும் இருக்கும் இந்தோனேசியா, கடந்த சில ஆண்டுகளில் ‘பிரிக்ஸ் பிளஸ்’ என்ற ஒத்துழைப்பில் முனைப்புடன் கலந்து கொண்டுள்ளது. திறந்த நிலை மற்றும் உள்ளடங்கிய தன்மை கொண்ட ஒரு ஒத்துழைப்பு அமைப்புமுறை, பிரிக்ஸ் தான்.
எனவே, இந்தோனேசியா உள்ளிட்ட ஒத்த நோக்கமுடைய பங்காளிகள், பெரிய பிரிக்ஸ் குடும்பத்தில் ஒன்றாக இணைவதை வரவேற்கிறோம் என்று குறிப்பிட்டார்.