மலையால திரைப்பட சங்கத்திலிருந்து மோகன்லால் உள்பட 16 பேர் கூண்டோடு ராஜினாமா..!

Estimated read time 1 min read

அடுத்தடுத்து வரும் பாலியல் புகார்களால் மலையாள திரைப்பட நடிகர் சங்க( AMMA) தலைவர் மோகன்லால் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர்.

மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த நீதிபதி ஹேமா தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஹேமா கமிட்டியின் அறிக்கை, சில தினங்களுக்கு முன் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

ஹேமா கமிட்டி ரிப்போர்ட் வெளியான பின்னர் பல நடிகைகள், தங்களுக்கும் பல்வேறு பாலியல் துன்புறுத்தல்கள் நடந்ததாக தற்போது கூறி வருகின்றனர். இதனையடுத்து பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்க, சிறப்பு புலனாய்வு குழுவை கேரள அரசு அமைத்துள்ளது.

முதலாவதாக பெங்காலி மொழி நடிகை ஸ்ரீலேகா மித்ரா, பிரபல இயக்குநரும் மலையாள சினிமா அகாடமி தலைவருமான ரஞ்சித் மீது பாலியல் புகார் கூறியிருந்தார். இதனையடுத்து சினிமா அகாடமி தலைவர் பொறுப்பை ரஞ்சித், ராஜினாமா செய்தார். இதேபோல் துணை நடிகை ரேவதி சம்பத், நடிகர் சித்திக் மீது பாலியல் புகாரளித்தார். இதனையடுத்து அவரும் தனது ரும் மலையாள திரைப்பட நடிகர் சங்க பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார்.

இவ்வாறாக நடிகர்கள் முகேஷ், மணியம்பிள்ளை ராஜு, இடைவேளை பாபு, ஜெயசூர்யா, ரியாஸ் கான், நடிகர்கள் பாபுராஜ், ஷான் டைம் சாக்கோ மற்றும் சில தயாரிப்பு நிர்வாகிகள் மீதும் இதுவரை 8 நடிகைகள் பாலியல் புகார் அளித்துள்ளனர். அத்துடன் மலையாள திரைப்பட நடிகர் சங்கத்தின் ( AMMA)செயல்பாடுகள் சரியாக இல்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் மலையாள சினிமாவின் முக்கிய அமைப்பான AMMA-வின் தலைவர் பொறுப்பை நடிகர் மோகன்லால் ராஜினாமா செய்தார். ஹேமா கமிட்டி ரிப்போர்ட் வெளிவந்ததை அடுத்து, ஏற்கனவே அம்மா-வின் பொது செயலாளர் நடிகர் சித்திக் பதவி விலகியதை அடுத்து தற்போது மோகன்லாலும் விலகியுள்ளார். அடுத்டுத்த பாலியல் புகார்களால் மலையாள திரைப்பட நடிகர் சங்கத்திலிருந்த் 16 பேர் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author