121 நாடுகளில் பரவிய குரங்கம்மை: தமிழ்நாட்டில் எடுக்கப்படும் நடவடிக்கைகள்
121 நாடுகளில் பரவிய குரங்கம்மை தொற்று காரணமாக 223 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாடு வருபவர்களை கண்காணிக்க சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது.
இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், “குரங்கம்மை தொற்று பரவலை தடுக்க, வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாடு வருபவர்களுக்கு காய்ச்சல், தோல் வெடிப்பு உள்ளிட்ட அறிகுறிகள் இருக்கிறதா என கண்காணிக்கப்படுகிறது. மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தும் வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது” என்றார்.
அத்துடன், குரங்கம்மை தொற்று குறித்து பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என்றும், அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளால் தொற்றை கட்டுப்படுத்த முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.