ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே இருக்கும் கள்ளிக்கோட்டை கோவிலில், பாண்டியர் காலத்து கல்வெட்டுகள் கிடைத்துள்ளது.
இதை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு கூறியதாவது, “சிவன் சன்னதியில் ஆறு துண்டுக் கல்வெட்டுகளையும், அம்மன் சன்னதியில் ஒரு கல்வெட்டையும் அமர்நாத் ராமகிருஷ்ணா குழுவினர் ஏற்கனவே பதிவு செய்துள்ளனர்”.
“மேற்பகுதி முழுவதும் இடிந்துள்ள சிவன் சன்னதி முன்மண்டபத்தின் கீழே ஜகதியின் பக்கவாட்டிலும், மேற்பகுதியிலும் மேலும் இரு துண்டுக் கல்வெட்டுகள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன” என்றார்.