சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும், வெளிவிவகார ஆணையப் பணியகத் தலைவருமான வாங் யீ ஆகஸ்ட் 27ஆம் நாள் பெய்ஜிங்கில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு விவகாரத்துக்கான அரசுத் தலைவரின் உதவியாளர் ஜேக் சல்லிவனுடன் புதிய சுற்று நெடுநோக்கு தொடர்பு நடத்தினார்.
வாங் யீ கூறுகையில், சீன-அமெரிக்க உறவு இவ்விரு நாடுகளுக்கு மட்டுமல்ல உலகிற்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என விளக்கு கூறினார். சென் ஃபிரான்சிஸ்கோவில் இரு நாட்டு அரசுத் தலைவர்கள் சந்திப்பு நடத்திய போது எட்டிய ஒத்த கருத்தைச் செவ்வனே செயல்படுத்துவது, இரு தரப்புகளின் பொது பொறுப்பாகவும், நடப்பு நெடுநோக்கு தொடர்பின் முக்கிய கடமையாகவும் இருக்கிறது. அடுத்த இரண்டு நாட்களில், இரு தரப்பும் ஆழமாக தொடர்பு கொண்டு, சென் ஃபிரான்சிஸ்கோ விருப்பத்தை நோக்கி இரு நாட்டுறவின் சீரான தொடரவல்ல வளர்ச்சியை முன்னேற்றுவதை எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.
ஜேக் சல்லிவன் கூறுகையில் அமெரிக்க-சீன உறவை பொறுப்புணர்வுடன் மேலாண்மை செய்து, போட்டி மோதலாக மாறாமல் தவிர்த்து, பொது நலன்களைக் கொண்டுள்ள துறைகளில் ஒத்துழைப்பு மேற்கொள்ள அரசுத் தலைவர் ஜோ பைடன் பாடுபட்டு வருகிறார். நடப்பு நெடுநோக்கு தொடர்பு மூலம், சீனத் தரப்பினருடன் பரந்துபட்ட கருப்பொருட்கள் குறித்து பயன்தரும் முறையில் பேச்சுவார்த்தை நடத்தி, இரு நாட்டு அரசுத் தலைவர்களின் ஒத்த கருத்தை செவ்வனே செயல்படுத்துவதை எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.