பாஸ்போர்ட் சேவை இணையதளம் அடுத்த 3 நாட்கள் இயங்காது  

நாளை, ஆகஸ்ட் 29ஆம் தேதி முதல் செப்டம்பர் இரண்டாம் தேதி வரை, 3 நாட்கள் பாஸ்போர்ட் சேவை பணிகள் நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள பாஸ்போர்ட் அலுவலகங்களில் தொழில்நுட்ப பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் இந்த பணிகள் நிறுத்தப்படுவதாக மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், பராமரிப்பு பணிகள் காரணமாக பாஸ்போர்ட் சேவை இணையதளம் 3 நாட்கள் இயங்காது.

ஆகஸ்ட் 29ஆம் தேதி வியாழக்கிழமை இரவு 8 மணி முதல் செப்டம்பர் இரண்டாம் தேதி திங்கட்கிழமை மாலை 6 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது எனத்தெரிவித்துள்ளது.

You May Also Like

More From Author