மத்திய நகரப்பணிக் கூட்டம் 14ஆம் மற்றும் 15ஆம் நாட்களில் பெய்ஜிங் மாநகரில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிப் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும் மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு முக்கிய உரை நிகழ்த்தினார். லி சியாங், சாவ் லேச்சி, வாங் ஹுநிங், சாய் ச்சி, திங் சுயேசியாங், லீ சி ஆகிய சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் பங்கெடுத்தனர்.
புதிய யுகத்தில் நகரப்புற வளர்ச்சியில் சீனா பெற்றுள்ள சாதனைகளை ஷி ச்சின்பிங் தனது உரையில் தொகுத்து கூறினார். மேலும் நகரப் பணி எதிர்கொள்ளும் நிலைமைகளை அவர் பகுப்பாய்வு செய்து, இத்துறைக்கான ஒட்டுமொத்த கோரிக்கைகள், முக்கிய கோட்பாடுகள் மற்றும் முக்கிய கடமைகளை உறுதிப்படுத்தியுள்ளார்.
நவீனமயமாக்க நகர அமைப்பை மேம்படுத்துதல், உயிராற்றல் மிக்க புத்தாக்க நகரங்களைக் கட்டியமைத்தல், வாழ்க்கைக்கு உகந்த வசதியான நகரங்களைக் கட்டியமைத்தல், பசுமையான குறைந்த – கார்பன் நகரங்களைக் கட்டியமைத்தல், பாதுகாப்பான நம்பகத்தக்க நகரங்களைக் கட்டியமைத்தல், தர்மங்களைக் கடைபிடிக்கும் நாகரிக நகரங்களைக் கட்டியமைத்தல், திறமையான அணுக்கத்தை அளிக்கும் ஸமாட் நகரங்களைக் கட்டியமைத்தல் உள்ளிட்ட 7 துறைகளுடன் தொடர்புடைய பணி முக்கியங்கள் இக்கூட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளன.