திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு ரூ.908 கோடி அபராதம் விதித்து அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது தமிழக அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க MP ஜெகத்ரட்சகன். இவர் கடந்த ஆட்சியின் போது மத்திய அமைச்சராக பதவி வகித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
2020-ல் சட்ட விரோத பணப்பரிமாற்றம் செய்ததாக ஜெகத்ரட்சகன் மற்றும் அவரின் குடும்பத்தார் மீது புகார் தொடுக்கப்பட்டது.
அதன் விளைவாக, சில மாதங்களுக்கு முன் ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது.
அதனைத்தொடர்ந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாக வழக்குபதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் தற்போது ரூ.908 கோடி அபராதம் விதித்தும், ரூ.89.18 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்வதாகவும் அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.