தமிழ்நாடு முதலமைச்சராக தவெக தலைவர் சி. ஜோசப் விஜய் கடந்த மே மாதம் 10ஆம் தேதி பொறுப்பேற்ற போது,”பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை முற்றிலும் ஒழிப்பதே அரசின் முதல் இலக்கு” எனக் கூறி, அதற்காக “சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை” அமைக்கப்படும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கோப்பில் மேடையிலேயே கையெழுத்திட்டார்.
நிர்வாகக் காரணங்களால் இரண்டு முறை தள்ளிவைக்கப்பட்ட இத்திட்டத்தின் அதிகாரப்பூர்வ தொடக்க விழா, இன்று மாலை 5 மணிக்கு சென்னை எழும்பூரில் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது.
முதலமைச்சர் விஜய் இந்தச் சிறப்புப் படையைத் தொடங்கிவைத்து உரையாற்றுகிறார்.
தமிழகத்தில் இன்று முதல் ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படை: முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்
