26 வயதில் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் ஆஸ்திரேலிய வீரர்  

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர் வில் புகோவ்ஸ்கியின் கிரிக்கெட் வாழ்க்கை மருத்துவ காரணங்களால் முடிவுக்கு வந்துள்ளது. 26 வயதே ஆன வீரர் மருத்துவ நிபுணர்கள் குழுவின் ஆலோசனையை பின்பற்றி ஓய்வு பெற உள்ளார்.

புகோவ்ஸ்கி தலையில் பல காயங்களுக்கு ஆளான பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது. கடந்த மார்ச் மாதத்தில் ஏற்பட்ட மூளையதிர்ச்சி அவரது கிரிக்கெட் பயணத்தில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
மூன்று மாதங்களுக்கு முன்பு புகோவ்ஸ்கியை ஓய்வு பெறுமாறு ஒரு சுயாதீன நிபுணர் குழு அறிவுறுத்தியுள்ளது.

இதையடுத்து விக்டோரியா மாகாண கிரிக்கெட் சங்கம் அவரது குழுவினருடன் இணைந்து அவரது ஓய்வு முடிவை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்த உள்ளது.

You May Also Like

More From Author