இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது லீட்ஸ் நகரில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதனைத்தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணி தங்களது முதல் இன்னிங்சில் 471 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.
ஜோ ரூட்டை வீழ்த்தி சாதனை நிகழ்த்திய பும்ரா :
இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக கேப்டன் சுப்மன் கில் 147 ரன்களையும், ரிஷப் பண்ட் 134 ரன்களையும், யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 101குவித்தனர். இங்கிலாந்து அணி சார்பாக பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோஷ் டங் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். ஒரு கட்டத்தில் இந்திய அணி 600 ரன்கள் வரை செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இங்கிலாந்து அணியினர் சிறப்பாக பந்துவீசி இந்திய அணியை கட்டுப்படுத்தி விட்டனர்.
பின்னர் தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வரும் இங்கிலாந்து அணியானது நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்களை குவித்துள்ளது. இங்கிலாந்து அணி சார்பாக அதிகபட்சமாக ஆலி போப் 100 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருக்கிறார். அவருக்கு அடுத்து துவக்க வீரர் பென் டக்கெட் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இந்த முதல் இன்னிங்சில் இந்திய அணி சார்பாக பந்துவீச்சில் பும்ரா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். இந்த போட்டியில் 13 ஓவர்களை வீசிய பும்ரா 2 மெய்டன் ஓவர்களுடன் 48 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரை தவிர்த்து மற்ற எந்த வீரரும் விக்கெட்டை வீழ்த்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரரான ஜோ ரூட்டை 28 ரன்களில் பும்ரா காலி செய்தார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜோ ரூட்டை 10 ஆவது முறையாக வீழ்த்தி அசத்தியுள்ளார். இதுவரை ஜோ ரூட்டுக்கு எதிராக 25 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள பும்ரா அவரை 10 ஆவது முறையாக வீழ்த்தியுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரை ஜோ ரூட்டின் விக்கெட்டை அதிமுறை வீழ்த்திய பந்துவீச்சாளராக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலிடத்தில் இருக்கிறார். கம்மின்ஸ் ஜோ ரூட்டை 11 முறை வீழ்த்தியுள்ளார். அவருக்கு அடுத்து ஜோஷ் ஹேசல்வுட் மற்றும் பும்ரா ஆகியோர் தலா 10 முறை அவரை வீழ்த்தி இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கத