2026ம் ஆண்டு பெய்ஜிங்கின் புகாருக்கு உடனே நடவடிக்கை என்ற ஹாட்லைன் சேவைச் சீர்திருத்தக் கருத்தரங்கு அக்டோபர் 12 மற்றும் 13ம் நாளில் பெய்ஜிங்கிலுள்ள தேசிய கூட்ட மையத்தில் நடைபெறவுள்ளது. நகரின் நிர்வாகத்துக்கு எண்ணியல் நுண்ணறிவு தொழில் நுட்பத்தின் பங்கு, மக்களின் தேவைக்கிணங்க நகர நிர்வாக நவீனமயமாக்கத்தை முன்னெடுப்பது முதலிய அம்சங்கள் குறித்து, 70க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த சர்வதேச விருந்தினர்கள் இதில் பஙகேற்று கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள உள்ளனர்.
சிஜிடிஎன் நிறுவனத்தின் பகுதி நேர செய்தியாளர்கள் நியூயார்கில் ஹாட்லைன் சேவை குறித்து உள்ளூர் குடிமக்களைப் பேட்டி கண்டனர். அப்பி காசிடி என்ற ஒரு நியூயார்க் குடிமக்கள் கூறுகையில், காவற்துறை முறைமை சாரா ஹாட்லைன் அமைப்பு முறையின் கட்டுமானம், கற்கத்தக்க முக்கியத்துவம் வாய்ந்தது. இத்தகைய பொது சேவை, நகர நிர்வாகத்தின் உயர் பணிப்பயன் மற்றும் பொது மக்களின் வாழ்க்கை வசதிக்கு துணை புரியும் என்று பாராட்டு தெரிவித்தார்.
