வட கொரியாவின் 76வது தேசிய தினத்துக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து

வட கொரியாவின் 76வது தேசிய தினம் செப்டம்பர் 9ஆம் நாள் கொண்டாடப்படுவதையொட்டி சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங் வட கொரிய தொழிலாளர் கட்சி மத்திய கமிட்டித் தலைவரும் தேசிய விவகார ஆணையத் தலைவருமான கிம் ஜோங் உனுக்கு வாழ்த்து செய்தி அனுப்பினார்.

ஷிச்சின்பிங் கூறுகையில், கடந்த 76 ஆண்டுகளில் வட கொரிய தொழிலாளர் கட்சியின் தலைமையில், வடகொரிய மக்கள் ஒற்றுமையுடன் தேசிய பல்வேறு இலட்சியத்தின் மாபெரும் வளர்ச்சியை முன்னேற்றியுள்ளனர். கடந்த சில ஆண்டுகளில், வட கொரிய தொழிலாளர் கட்சி மத்திய கமிட்டித் தலைவர் வட கொரிய கட்சிக்கும் மக்களுக்கும் தலைமை தாங்கி, வடகொரிய கட்சியின் எட்டாவது தேசிய மாநாடு மற்றும் முந்தைய அமர்வுகளின் எழுச்சியை ஆழமாகச் செயல்படுத்தி, கட்டுமான மற்றும் வளர்ச்சியின் சாதனைகளைப் பெற்றுள்ளார். பொதுச் செயலாளர் கிம் ஜோங் உனின் தலைமையிலான கொரியாவின் தொழிலாளர் கட்சியின் தலைமையில், வடகொரிய பாணியுடைய சோஷலிச இலட்சியத்தை முன்னெடுக்கும் பயணத்தில் வடகொரிய மக்கள் புதிய மற்றும் பெரிய வெற்றிகளைத் தொடர்ந்து பெறுவது உறுதி என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார். 

Please follow and like us:

You May Also Like

More From Author