42ஆவது ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் சீனாவின் அனைத்து ஆசிரியர்களுக்கும் கல்வி துறைப் பணியாளர்களுக்கும்யி தின வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
அவர் தனது வாழ்த்துச் செய்தியில் கூறுகையில், நீண்டகாலமாக, சீன ஆசிரியர்கள் கட்சியின் கல்விக் கோட்பாட்டைப் பின்பற்றி, கல்வியறிவுகளைக் கற்றுக்கொடுத்து, கட்சி மற்றும் நாட்டின் இலட்சிய வளர்ச்சிக்கு முக்கிய பங்கு ஆற்றியுள்ளனர் என்று சுட்டிக்காட்டினார்.
மேலும் அவர் கூறுகையில், புதிய பாதையில், ஆசிரியர்கள் தொடர்ந்து ஆரம்பக் காலத்தில் இருந்த கனவு மற்றும் கடமையை மறக்காமல், தேச மறுமலர்ச்சிக்குப் பொறுப்பேற்கும் புதிய தலைமுறையினர்களை வளர்க்கப் பாடுபட வேண்டும். பல்வேறு நிலை கட்சி மற்றும் அரசுகள் ஆசிரியர்கள் குழுவின் கட்டுமானத்தில் கவனம் செலுத்தி, அவர்களுக்கு மதிப்பளிக்கும் சிறந்த சூழலை உருவாக்கி, கல்வியின் மூலம் நாட்டை வலுப்படுத்தும் ஆற்றலைக் குவிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
