14ஆவது பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் உயர் நிலைப் பிரதிநிதிகளின் கூட்டம் செப்டம்பர் 11, 12ஆம் நாட்களில் ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெறவுள்ளதாகச் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மௌநிங் 9ஆம் நாள் செய்தியாளர் சந்திப்பில் அறிமுகப்படுத்தினார். அவர் மேலும் கூறுகையில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும் வெளி விவகார ஆணைய அலுவலகத்தின் தலைவருமான வாங்யீ இதில் கலந்து கொள்வார். அவர் பிரிக்ஸ் கூட்டாளியுடன் இணைந்து, சர்வதேச பாதுகாப்பு நிலைமை, முக்கிய சர்வதேச மற்றும் பிரதேச பிரச்சினைகள் முதலியவைக் குறித்து கருத்துக்களைப் பரிமாறி பிரிக்ஸ் நாட்டுத் தலைவர்களின் 16ஆவது பேச்சுவார்த்தைக்கு அரசியல் ரீதியிலான ஆயத்தம் மேற்கொள்வார். மேலும், அரசியல் பாதுகாப்பு துறையில் சீனா, பிரிக்ஸ் கூட்டாளியுடனான ஒத்துழைப்பைப் பயனுள்ளதாக உயர்த்தி பிரிக்ஸ் ஒத்துழைப்புக்கும் உலகின் அமைதி மற்றும் பாதுகாப்புக்கும் ஆக்கப்பூர்வமான ஆற்றலைக் கொண்டு வர விரும்புவதாக மௌநிங் சுட்டிக்காட்டினார்.
பிரிக்ஸ் கூட்டாளியுடன் இணைந்து நெடுநோக்குக் கூட்டாளியுறவை வலுப்படுத்தச் சீனா எதிர்பார்ப்பு
You May Also Like
தகைச்சி சனேவின் கூற்றுக்கு எதிராக ஜப்பான் மக்கள் பேரணி
November 29, 2025
மீட்சியடைந்த சீன-இந்திய பயணியர் விமான சேவை
October 18, 2025
சீன நிறுவனங்கள் மீது கனடா தடை விதித்தலுக்கு சீனா எதிர்ப்பு
February 26, 2025
