போ ஆவ் ஆசிய மன்றத்தின் 2024ஆம் ஆண்டுக்கூட்டத்தில் மார்ச் 27ஆம் நாள் பல கருத்தரங்குகள் நடத்தப்பட்டன. அன்று நடைபெற்ற “ஆசியாவின் நாணய ஒத்துழைப்பை ஆழமாக்குதல்” எனும் கருத்தரங்கில், பல்வேறு தரப்புகளுடன் மேலும் பயன்மிக்க நாணய பாதுகாப்பு வலைப்பின்னலை கூட்டாக உருவாக்க சீனா விரும்புவதாக சீன மக்கள் வங்கித் தலைவர் பான் குங்ஷெங் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், உலகின் நாணய பாதுகாப்பு வலைப்பின்னலின் மையமான சர்வதேச நாணய நிதியம் மேலும் நன்றாக பங்காற்றுவதைத் தூண்டும் வகையில், இந்நிதியத்தின் பங்களிப்பின் சீர்திருத்தத்தை தொடர்ந்து முன்னேற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.
தற்போது வரை சீன மக்கள் வங்கி 29 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் மத்திய வங்கிகள் அல்லது நாணய அதிகார வட்டாரங்களுடன் இரு தரப்பு பண மாற்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. மொத்த மாற்றுத் தொகை 4 லட்சம் கோடி யுவானைத் தாண்டியுள்ளது. எல்லை கடந்த வர்த்தகம் மற்றும் முதலீட்டை இது பயன்தரும் முறையில் விரைவுபடுத்தியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.