சி.ஐ.ஐ.இ எனப்படும் சீனச் சர்வதேச இறக்குமதிக் கண்காட்சி 5ஆம் நாள் புதன்கிழமை ஷாங்காய் மாநகரில் துவங்கியது. நவம்பர் 5ஆம் நாள் முதல் 10ஆம் நாள் வரை நீடிக்கும் 8வது கண்காட்சியில்,155 நாடுகள் மற்றும் பிராந்தியங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகள் கலந்து கொள்கின்றன. இதில், 4108 வெளிநாட்டு கண்காட்சியாளர்கள் இடம்பெறுகின்றனர். இவ்வாண்டுக் கண்காட்சியில் 461 புதிய தயாரிப்புகள், தொழில்நுட்பங்கள் மற்றும் சேவைகள் பொது மக்களுக்கு அறிமுகம் செய்யப்படுகின்றது.
“ஆசியா-ஆப்பிரிக்க தயாரிப்புகள் மண்டலம்” மற்றும் “எல்லை தாண்டிய மின் வணிகத் தேர்வு தளம்” ஆகியவை இக்கண்காட்சியில் முதன்முறையாக அமைக்கப்பட்டுள்ளன.சீனச் சந்தையில் ஆப்பிரிக்க நிறுவனங்கள் மற்றும் பிற சிறிய வெளிநாட்டு வணிகங்களின் நுழைவை எளிதாக்கும் நோக்கத்தில்,இந்த புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.மேலும், “விளையாட்டு பூங்கா” மற்றும் “சர்வதேச வாகனக் கண்காட்சி மண்டலம்” ஆகியவையும் முதல்முறையாக நிறுவப்பட்டது.
தற்போது வரை மொத்த 4 லட்சத்து 65 ஆயிரம் தொழில்முறைப் பார்வையாளர்கள் இக்கண்காட்சியில் பங்கேற்க பெயர் பதிவு செய்துள்ளனர். இக்காலக்கட்டத்தில், ஹோங்சியாவ் சர்வதேச பொருளாதார மன்றக்கூட்டம் நடைபெறும் மற்றும் 2025ஆம் ஆண்டு உலக திறப்பு அறிக்கை உள்பட மொத்த 21 முக்கிய அறிக்கைகளும் வெளியிப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
