சென்னையில் மூன்று புதிய மின்சார ரயில்களின் சேவை தொடக்கம்  

சென்னை சென்ட்ரலில் இருந்து ஆவடிக்கு ஒரு மின்சார ரயிலும், திருவள்ளூருக்கு இரண்டு மின்சார ரயில்களும் தென்னக ரயில்வேயால் திங்கட்கிழமை (செப்டம்பர் 9) முதல் கூடுதலாக இயக்கப்படுகிறது.
முன்னதாக தென்னக ரயில்வே, கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் திங்கட்கிழமை முதல் மூன்று புதிய ரயில் சேவை இயக்கப்படும் என அறிவித்தது.
இதன்படி, திங்கட்கிழமை முதல் ரயில் எண். 43012, ஆவடி – சென்னை சென்ட்ரல் இடையே இயங்குகிறது. இதன் முதல் பயணம் ஆவடியில் இருந்து காலை 9.50 மணிக்கு தொடங்கியது.
ரயில் எண். 43219 திருவள்ளூரில் இருந்து காலை 10:40மணிக்கு கிளம்பி சென்னை சென்ட்ரலுக்கு சென்றது.
அதேபோல் மற்றொரு ரயில் திருவள்ளூரில் இருந்து மாலை 3.50 மணிக்கு கிளம்பி சென்ட்ரல் நோக்கி சேவையைத் தொடங்கியது.

You May Also Like

More From Author