சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் தயாரிக்கப்பட்ட 131 நகரங்களின் சமீபத்திய தரவுகளின்படி, 2017-18 அளவுகளுடன் ஒப்பிடும்போது 2023-24இல் 21 நகரங்கள் முக்கியமான காற்று மாசுபடுத்தும் PM10 இன் செறிவை 40 சதவீதத்திற்கும் அதிகமாகக் குறைத்துள்ளன.
திருச்சி, தூத்துக்குடி, கிரேட்டர் மும்பை, வாரணாசி, ஆக்ரா, லக்னோ, கான்பூர், டேராடூன் மற்றும் தன்பாத் உள்ளிட்ட நகரங்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
PM10 (10 மைக்ரோகிராம் விட்டம் தாண்டாத நுண்துகள்கள்) சுவாசத்தின் மூலம் நுரையீரலுக்குள் நுழையும் அளவுக்கு சிறியது. இது கடுமையான உடல்நலக் கேடுகளை ஏற்படுத்துகிறது.
இந்த நகரங்கள் தேசிய தூய்மையான காற்று திட்டத்தின் இலக்கை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே எட்டியிருந்தாலும், அவற்றில் கிரேட்டர் மும்பை, வாரணாசி, ஆக்ரா உட்பட பெரும்பாலானவை ஏற்றுக்கொள்ளக்கூடிய வரம்பை (தேசிய தரநிலைகள்) பூர்த்தி செய்யவில்லை.