இணைய வழியாக நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் திங்கள்கிழமை பெய்ஜிங்கில் இருந்து காணொலி மூலம் கலந்து கொண்டார்.
தற்போது, உலகில் கடந்த நூற்றாண்டுகளில் கண்டிராத மாற்றம் விரைவாக நிகழ்ந்து வருகிறது. மேலாதிக்கவாதம், ஒருதரப்புவாதம் மற்றும் பாதுகாப்புவாதம் எழுந்துள்ளது. குறிப்பிட்ட ஒரு சில நாடுகள் அடுத்தடுத்து, வர்த்தகப் போர் மற்றும் சுங்க வரி போரை தொடுத்து வருகின்றன.
அது, உலகப் பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதித்து, சர்வதேச வர்த்தக விதிமுறைகளைக் கடுமையாகச்சீர்குலைத்துள்ளது. இந்த மிகவும் முக்கியமான தருணத்தில், உலகளாவிய தெற்கில் உள்ள முதல் அணியாக திகழும் பிரிக்ஸ் நாடுகளே, திறந்த மற்றும் உள்ளடக்கிய மனதுடன், ஒத்துழைப்பு மற்றும் கூட்டு வெற்றி அடைவது என்ற பிரிக்ஸ் குறிக்கோளைப் பின்பற்றி, பலதரப்புவாதம் மற்றும் பலதரப்புவர்த்தக முறைமையைப் பேணிக்காத்து, பெரிய பிரிக்ஸ் ஒத்துழைப்பை முன்னெடுத்து, மனித குலத்திற்கு பகிரக்கூடிய எதிர்காலம் கொண்ட சமூகத்தை உருவாக்க இணைந்து செயல்பட வேண்டும் என்று ஷிச்சின்பிங் சுட்டிக்காட்டினார்.
பலதரப்புவாதத்தைக் கடைப்பிடித்து, சர்வதேச நீதி மற்றும் நியாயத்தைப் பாதுகாத்தல், திறப்பு மற்றும் கூட்டு வெற்றியைப் பின்பற்றி, சர்வதேச பொருளாதார வர்த்தக ஒழுங்குமுறையைப் பேணிக்காத்தல், ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பை நிலைநாட்டி, பொதுவான வளர்ச்சிக்கான ஆற்றலை ஒன்றாக திரட்டுவது ஆகிய மூன்று அம்ச முன்மொழிவுகளை ஷிச்சின்பிங் தனது உரையில் வழங்கினார்.
உலக வர்த்தக அமைப்பை மையமாக கொண்டுள்ள பலதரப்புவாத வர்த்தக அமைப்புமுறையைப் பேணிக்காத்து, அனைத்து வித பாதுகாப்புவாதத்தையும் எதிர்க்க வேண்டும்.
தத்தமது மேம்பாடுகளைப் பயன்படுத்தி, ஒத்துழைப்புகளை ஆழமாக்கி, பொருளாதார வர்த்தகம், நிதி, அறிவியல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் அதிக ஒத்துழைப்பு சாதனைகளைப் படைத்து, பல்வேறு நாடுகளின் மக்களைப் பயனடைய செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அன்று நடைபெற்ற உச்சிமாநாட்டில், தற்போதைய சர்வதேச நிலைமைகள் மற்றும் பொது அக்கறை கொண்ட விவகாரங்கள் குறித்து பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் ஆழமாக கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.